மானமுள்ள ஆசிரியருடன் விருந்து சாப்பிட விரும்பும் அண்ணாமலை - வீரமணி தயாரா?

மானமுள்ள ஆசிரியர் அப்டின்னு செல்லமா எல்லாரும் கூப்டுற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ரொம்பவே தமிழ்நாட்டுல பேமஸ்'ங்க!

Update: 2023-02-07 07:24 GMT

மானமுள்ள ஆசிரியர் அப்டின்னு செல்லமா எல்லாரும் கூப்டுற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ரொம்பவே தமிழ்நாட்டுல பேமஸ்'ங்க! இவர் திராவிடர் கழகத்தை வளர்த்து அடைஞ்ச புகழை விட மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி போட்ட ஒரே டீவீட்ல உலக பேமஸ் ஆகிட்டாருங்க! அது என்ன ட்வீட்'ன்னு கொஞ்சம் தேடி பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்! அது மட்டுமில்லாம கிரகணத்தப்ப சாப்பிடுறது, கருப்பு சட்டை போட்டுக்கிட்டு இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறது அப்டின்னு இந்த மானமுள்ள செய்ற காரியம் எல்லாம் ஆதித்யா டிவி'ல போடுற அளவுக்கு செம்ம வைரல்ங்க! சரி அத விடுங்க இப்ப நம்ம விஷயத்துக்கு வருவோம்!

அரசியலில் சாதிக்க விரும்பும் இளைஞர்களை நல்ல அரசியல் தலைவர்களா உருவாக்கும் வகையிலான பயிற்சி திட்டமான 'தலைவா' கருத்தரங்க நிகழ்வை அஸ்பயர் சுவாமிநாதன் ஒருங்கிணைச்சு ஒரு நிகழ்ச்சி நடத்தினருங்க! இந்த 'தலைவா' பயிற்சி கருத்தரங்கத்தில தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினரா அண்ணாமலை கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சில பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை என்ன சொன்னாருன்னா, 'பாஜக தொண்டர்கள் நம் சித்தாந்தங்களை பின்பற்றுவதோடு, மாற்று சித்தாந்தம் கொண்டவர்களோடும் கலந்துரையாடவும் வேண்டும்' அப்டின்னு அண்ணாமலை பேசியிருக்கார்.

மேலும் அண்ணாமலை என்ன சொன்னாருன்னா, 'நான் பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றதும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவைச் சந்தித்துப் பேசினேன்' அப்டின்னு சொல்லிருக்காரு.

இது மட்டுமில்லாம அண்ணாமலை சொன்ன இந்த விஷயம் தாங்க ஹைலைட்டே! அப்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்ன சொன்னாரு தெரியுமா? 'திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை' அப்டின்னு சொன்னதுதான் எல்லாருக்கும் ஆச்சர்யம், ஏன்னா திராவிடர் கழகம் கொள்கை ரீதியா மட்டுமில்லங்க தமிழ்நாட்டுல பாஜக கால் வைக்க முடியாம இருக்குற ஒரு நிலைய உருவாக்கி அதை ரொம்ப தீவிரமா கடைபிடிச்சுட்டு வர்றது இந்த திராவிடர் கழகம், அப்படிப்பட்ட திராவிடர் கழக தலைவரோட உணவு அருந்த ஆசை அப்டின்னு ஏன் அண்ணாமலை சொல்றாரு? அப்படி என்ன நடந்துருக்கும்'னு எல்லாரும் ஆச்சர்யமாகிட்டாங்க!

இதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரே விளக்கம் கொடுத்துட்டாருங்க, அண்ணாமலை என்ன சொன்னாருன்னா, 'எதிர்த்தரப்பு கொள்கை உடையவர்களுடன் பழகும்போது நமது மனம் திறக்கும். நான் அத்தகையோருடன் பழகியிருக்கிறேன். அந்த தருணங்களில் எனக்குள் ஒரு கண் திறந்தது. யார் யாருடனெல்லாம் பழகி பேச வேண்டும் என்று மிகப்பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். அதில் ஒருவர் தான் கி.வீரமணி.

நான் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்திக்க விரும்புவதாக கட்சியினரிடம் கூறினேன். அதை கேட்டதும் பாஜக கட்சிக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாஜக தலைவர் கம்யூனிஸ்ட் தலைவரை சந்திக்கலாமா என்று தயங்கினார்கள். ஆனால் நான் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து அவரது ஆசீர்வாதத்தைப் பெற்றேன்.' அப்டின்னு சொல்லிருக்கார்!

நான் வீரமணியை சந்திக்குறேன்'ன்னு சொன்னது என்னோட அரசியல் நிலைக்கு முரண்பாடா இருந்தாலும் மாற்று கருத்து எண்ணம் உடையவர்களுடன் பேசுறப்ப ஒருவிதமான தெளிவு கிடைக்கும்னு அண்ணாமலை இளைஞர்ளுக்கு ஒரு புது விதமான எண்ணத்தை கற்பிச்சிருக்காரு அப்டின்னு சொல்லலாம்! 

Similar News