இனி ஒரு தேர்தலிலும் இந்து விரோத சக்திகள் ஜெயிக்கவே கூடாது - விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஹெச்.ராஜா சூளுரை
'இந்து சமுதாயத்திற்கு எதிராக எல்லா வகையிலும் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது' என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.
'இந்து சமுதாயத்திற்கு எதிராக எல்லா வகையிலும் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது' என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.
இந்து முன்னணி சார்பில் கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நேற்று நடந்த விநாயகர் சிலை விஸர்ஜன பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், 'தெய்வ பக்தி வாயிலாக தேச பக்தி ஏற்படுத்தும் நோக்கத்துடன் விநாயகர் சதுர்த்தி விழாவை சுதந்திர போராட்டத் தலைவர் திலகர் நடத்த துவக்கி வைத்தார். நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையிலும் இந்த விழா நடத்துவதற்கான காரணங்கள் இருக்கின்றன.
இந்துவிரோதிகள் தமிழகத்தில் சுதந்திரமாக சுடுகின்றனர். தமிழகத்தில் 39 ஆண்டுகளுக்கு முன் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது விழாவாக ஹிந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நடத்த துவங்கினார்.
இந்து மதத்திற்கு இரண்டு அச்சுறுத்தகள் இருக்கின்றன என அவர் குறிப்பிட்டார் வெளியிலிருந்து நடக்கும் மதமாற்றம் மற்றும் உள்ளிருந்து எதிர்க்கும் இந்து விரோதத்தாலும் அச்சுறுத்தல் இருக்கிறது என கூறினார் இந்து விரோத அரசியல் சக்திகளை அப்புறப்படுத்த வீடு வீடாக சென்று வலியுறுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் மற்ற மதங்களின் விழாவிற்கு வாழ்த்து சொல்பவர் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என திட்டவட்டமாக கூறினார் ஹெச்.ராஜா.