தி.மு.க கவுன்சிலரை தூக்கிய பா.ஜ.க - லிஸ்டில் இன்னும் நிறைய பேரா?

சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் பா.ஜ.க'வில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-08-09 11:31 GMT

சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் பா.ஜ.க'வில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


அ.தி.மு.க'வில் இருந்து விலகி சுயேட்சையாக வெற்றி பெற்று தி.மு.க'வில் இணைந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலரான லியோ சுந்தரம் என்பவர் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க'வில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை இவர் இணைந்த பிறகு இரண்டாக உயரந்துள்ளது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 198 வது வார்டில் வெற்றி பெற்ற லியோ சுந்தரம் என்பவர் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பா.ஜ.க'வில் இணைத்துக் கொண்டார் அவரை பா.ஜ.க நிர்வாகிகள் வரவேற்று மரியாதை செய்தனர்.


இதனால் மாநகராட்சியில் பா.ஜ.க'வின் பலம் தற்பொழுது கூடி உள்ளது.



Similar News