போதை வழக்கில் கைதாகும் அளவிற்கு பிள்ளையை வளர்த்த, ஷாரூக்கானின் விளம்பரத்தை நிறுத்திய நிறுவனம் !
போதை வழக்கில் கைதாகும் அளவிற்கு பிள்ளையை வளர்த்தி ஷாருக்கான் நடித்த விளம்பரங்களை 'பைஜூ'ஸ் நிறுவனம்' நீக்கியுள்ளது.
ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் ஊதியம் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கல்வி தொடர்புடைய பைஜூஸ் நிறுவனத்தின் விளம்பரதாரராக ஷாருக்கான் செயல்பட்டு வந்தார். அவர் நடித்துள்ள விளம்பரத்தின் மூலம் தனது ஆப்பை பைஜூஸ் விளம்பரம் செய்து வந்தது.
இந்த நிலையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அந்த விளம்பரங்களை பைஜூஸ் நிறுவனம் ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்தியுள்ளது.