அசாம் உள்ளாட்சி: பா.ஜ.க. 74 நகராட்சிகளை கைப்பற்றி சாதனை!

அசாமில் மொத்தம் 80 நகராட்சிகளில் நடைபெற்ற தேர்தலில் 74 நகராட்சிகளை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

Update: 2022-03-10 05:54 GMT

அசாமில் மொத்தம் 80 நகராட்சிகளில் நடைபெற்ற தேர்தலில் 74 நகராட்சிகளை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

அசாமில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளார். அங்கு 80 நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 977 வார்டுகளில் 57 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து மற்ற வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கைகள் நேற்று நடைபெற்றது.

மொத்தம் 74 நகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதன் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் 2 நகராட்சிகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மீதம் உள்ள வார்டுகளில் சுயேட்சைகள் முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News