திராவிட கட்சிகளை கதிகலங்க வைத்த பா.ஜ.க.!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் கொடுத்த வரவேற்பும், அவரை வாழ்த்தி ஒட்டப்பட்ட பிரம்மாண்ட வால் போஸ்டர்களும், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளை கதிகலங்க வைத்துள்ளது.

Update: 2021-07-18 05:23 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் கொடுத்த வரவேற்பும், அவரை வாழ்த்தி ஒட்டப்பட்ட பிரம்மாண்ட வால் போஸ்டர்களும், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளை கதிகலங்க வைத்துள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனை அக்கட்சி தலைமை மத்திய இணை அமைச்சராக்கியது. இதனால் அவர் வகித்து வந்த தலைவர் பதவி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு வழங்கி தேசிய தலைமை அறிவிப்பு வெளியிட்டது. 


இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களில் அண்ணாமலை மிகவும் இளையவர் ஆவார்.

இதனிடையே, தமிழக தலைவராக பொறுப்பேற்க, அண்ணாமலை கோவையில் கடந்த 14ம் தேதி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் வழிநெடுகிலும் தொண்டர்களை சந்தித்து வந்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அண்ணாமலைக்கு உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். பூக்கள் தூவுவது, மற்றும் பேனர்கள் வைத்து அசத்தினர்.


இதன் பின்னர் கடைசியாக சென்னையில் கடந்த 16ம் தேதி முறைப்படி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை நேரில் தெரிவித்தனர்.

இதனிடையே சென்னையில் மட்டும் அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சாலைகளின் இரண்டு புறங்களிலும், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட படங்கள் அடங்கிய மிகப்பெரிய வால் போஸ்டர்களை அச்சடித்து பாஜகவினர் சுவர்களில் ஒட்டியிருந்தனர். 


மேலும், கமலாலயம் அமைந்துள்ள சாலையின் முன்புறத்தில் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி, மேளதாளம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். இவை அனைத்தும் திமுக மற்றும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின்போது மிகப்பெரிய ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளித்தது போன்று தற்போது பாஜகவினர் அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுத்தனர்.

பாஜக தலைவரான அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை பார்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் கதிகலங்கி போயுள்ளது. வருங்காலங்களில் பாஜக கட்சியை அனைத்து கிராமங்களுக்கும் எடுத்து செல்வேன் என அண்ணாமலை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News