நீங்கள் செல்வ செழிப்புடன் இருக்க மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை அவதிக்குள்ளாக்குவதா? அண்ணாமலை கண்டனம்!
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்த நிலையில், நீங்கள் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு மக்களை அவதிக்குள்ளாக்குவதா? என்று தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உயர்த்தப்படாத மின்வெட்டு தற்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? pic.twitter.com/ZSiP21QgwX
— K.Annamalai (@annamalai_k) July 18, 2022
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும், 200 யூனிட் வரையில் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம் செய்யப்படும் என்றார். மேலும், 300, 400, 500 யூனிட் வரையில் உபயோகிக்கும் குடும்பத்தினருக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 100 யூனிட் மின்சாரம் வேண்டாம் என்று சொல்பவர்கள் எழுதிக் கொடுக்கும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
இந்நிலையில், மின்சார கட்டண உயர்வுக்கு தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில், பல சாக்குப் போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பு மக்களின் மின் கட்டணத்தையும் இன்று உயர்த்திவிட்டார். மேலும், தி.மு.க. ஆட்சியில் சிலரைப் பணக்காரர்களாக மாற்றுவதற்கு தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: One India Tamil