தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி.!
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழக பாஜக துணைத்தலைவரும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பலரை நேரடியாக சந்தித்து வாக்குகளை சேகரித்து வந்தார். இதனிடையே கடந்த 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.