ஓ.பி.எஸ்., மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி நேற்று அதிகாலை 6.45 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனிக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேனியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் திருநெல்வேலி பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் ஆகியோர் விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினர்.
Source, Image Courtesy: Annamalai Twiter