அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையில் நடிகர்களாக பா.ஜ.க பங்கேற்காது - அண்ணாமலை அதிரடி

அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையிலே, நாடக நடிகர்களாக தமிழ்நாடு பா.ஜ.க பங்கேற்க விரும்பவில்லை என பி.ஜே.பி அண்ணாமலை ட்விட்டர் பதிவு.

Update: 2022-11-12 10:19 GMT

இன்று நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க பங்கேற்கவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியில் எடுத்தோர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் 103 வது திருத்தத்தின் மூலமாக 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 சதவீத இட ஒதுக்கிடை மத்திய பா.ஜ.க அரசு வழங்கியது. இதனை எதிர்த்து பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றங்களிலும் திமுக உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றம் அனைத்து மனுக்களையும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட பின் இந்த வாரம் ஏழாம் தேதி அதன் தீர்ப்பை வெளியிட்டது. வழக்கம்போல் தி.மு.க தலைவர், தி.மு.க கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரது தோழமைக் கட்சிகள் பெரும்பாலானோர் இந்த தீர்ப்புக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தற்போது முன்வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10% இட ஒதுக்கீடு ஆதரித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.


தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு 50% கடந்த பொழுதும் அதற்கு எதிராக பலர் உரல் எழுப்பினாலும் தமிழகத்தில் மக்கள் தொகையின் விகிதச்சாரம் எவ்வாறு உள்ளது?என்பதை கருத்தில் கொண்டு 69 சதவீத இட ஒதுக்கீடு ஆதரவான நிலைப்பாட்டை பாரதிய ஜனதா கட்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியூர் இட ஒதுக்கீடு மூலமாக செட்டியார், நாயுடு, பிள்ளை, முதலியார், பிராமணர்கள் போன்று 79 சமூகத்தினர் பயன்பெறுவார்கள். அனைத்து தரப்பு மக்களும் எனவே அதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி.


எனவே சனிக்கிழமை இன்று நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் இன்று நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்க பாரதிய ஜனதா கட்சிக்கு விருப்பமில்லை தி.மு.கவைப் போல் போலியாக வேஷம் அணிந்து எங்களுக்கு நடிக்க தெரியாது. ஆகவே பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற உள்ள, அனைத்து கட்சி கூட்டத்தை பாரதிய ஜனதா கட்சி புறக்கணிக்கிறது. என்பதை இவ்வரிக்கையின் வாயிலாக தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் ட்விட்டரில் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார். பா.ஜ.க மட்டுமல்லாமல் அ.தி.மு.கவும் இந்த பொதுக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்ய உள்ளதாக கூறுகிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Twitter Post

Tags:    

Similar News