பெண்கள் முன்னேற்றத்திற்காக மோடி கொண்டு வந்த மகத்தான திட்டங்கள் - மகளிர் அணி கூட்டத்தில் அண்ணாமலை!

பெண்கள் முன்னேற்றத்திற்காக மோடி அரசாங்கம் கொண்டு வந்த மகத்தான மக்களை சென்றடைவதை பா.ஜ.க உறுதி செய்கிறது.;

Update: 2022-11-17 06:51 GMT
பெண்கள் முன்னேற்றத்திற்காக மோடி கொண்டு வந்த மகத்தான திட்டங்கள் - மகளிர் அணி கூட்டத்தில் அண்ணாமலை!

இன்று செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் பாஜக மகளிர் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க மகளிர் அணி தலைவர் திருமதி. உமாரதி ராஜன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் தான் உரையாற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்.


தமிழகத்திலும் பா.ஜ.க தன்னுடைய இடத்தை பெற வேண்டும் என்பதற்காக, பா.ஜ.க மகளிர் அணி சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பா.ஜ.க மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் மோடி அரசின் திட்டத்தினால் பயனடைந்த பயனாளர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய நம்பிக்கையை பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பெண்கள் முன்னேற்றத்திற்காக உருவாக்கிய மகத்தான திட்டங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிக்கு சென்றடைந்த பயன் பெற செய்வதில் தமிழக பா.ஜ.க மகளிர் அணி ஆற்றிய பங்கு பற்றி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் உரை நிகழ்த்தினார்.



குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்திலும் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இருக்கிறது. அத்தகைய அரசு கொண்டுவரும் திட்டங்கள் தமிழகத்தில் அனைத்து மக்களையும் சென்று செல்வதில் பா.ஜ.க முக்கிய பங்கு பகுத்து வருகிறது. மேலும் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் இத்தகைய முயற்சிகள் தற்பொழுது மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு காரணமாக பல்வேறு தரப்பு மக்களிடம் தற்பொழுது மத்திய அரசின் திட்டங்கள் கொண்டு போய் சேர்க்கப்பட்டுள்ளது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

Input & Image courtesy: Twitter Source

Tags:    

Similar News