தனக்கு பேரும், புகழும் அளித்தது தமிழர்கள்தான்: பா.ஜ.க. வேட்பாளர் குஷ்பு உருக்கமான பேச்சு.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.

Update: 2021-03-17 10:19 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இனறு அதிமுக கூட்டணி நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகையும் பாஜக வேட்பாளருமான குஷ்பு பேசியதாவது: 35 ஆண்டுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த தனக்கு இன்று பேரும் புகழும் கொடுத்த தமிழக மக்களை நம்பியே இந்த தேர்தலில் களம் காண்கிறேன் என்று கூறினார்.


 



தனது முன்னேற்றத்திற்கு தனது தாய்தான் காரணம் என தழுதழுத்த குரலில் பேசினார். அவரது பேச்சை கூர்ந்து கூட்டணி கட்சியினர் கவனித்து வந்தனர். வருகின்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் கண்டிப்பாக செல்வார் என்று அனைத்து தரப்பு மக்களும் பேசிக்கொள்கின்றனர்.


 



அவரது வெற்றிக்காக கூட்டணி கட்சியினரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். சட்டமன்றத்தில் தமிழக நலனுக்காக எடுத்துரைப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Tags:    

Similar News