பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: என்.ஐ.ஏ., விசாரணை வேண்டும்: அண்ணாமலை!
தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி வெடிக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் அலுவலகம் பலத்த சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் சில விளக்கங்களை அளித்துள்ளனர். ஆனால் அது அனைத்தும் கட்டுக்கதை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் முதற்கட்டமாக விசாரணை செய்ததில் கூறியதில், நீட் விவகாரத்தில்தான் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது என்ற காரணத்தை குறிப்பிட்டனர். ஆனால் இதனை பாஜகவினர் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அதில் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மிகப்பெரிய சதி அமைந்துள்ளது. நீட் தேர்வால்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறுகை நகைச்சுவை. அதிலும் போலீசார் கூறும் காரணங்கள் அனைத்தும் கட்டுக்கதை. மேலும், தடயங்களை போலீசார் அழித்துள்ளனர். எனவே இது தொடர்பான உண்மை வெளிவருவதற்கு என்.ஐ.ஏ., விசாரணை நடத்தினால் தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Source, Image Courtesy: Maalaimalar