ஓசூரில் பா.ஜ.க. நிர்வாகி கைது.. தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்.!
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் பாஜக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து பாஜக சார்பில் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் பாஜக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து பாஜக சார்பில் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள உத்தனப்பள்ளியை சேர்ந்தவர் பத்மநாபன், இவர் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் திமுக அரசு பற்றி ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். இதனை திமுக நிர்வாகிகள் பத்மநாபன் மீது உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து பத்மநாபன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதனிடையே கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் திமுக அரசு மற்றும் போலீசாரை கண்டித்தும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜகச சார்பில் உத்தனப்பள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திமுக அரசுக்கு எதிராகவும், போலீசாரின் அராஜக போக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை ஏற்றார். இதில் ஒன்றிய தலைவர் வினோத், மாவட்ட பொதுசெயலாளார் ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் முருகன், அம்மன் சுரேஷ், சீனிவாசன், பாபு மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.