'தன்வினை தன்னைச் சுடும்' - தி.மு.க'விற்கு வகுப்பெடுத்த அண்ணாமலை

பரந்தூர் விமான நிலையம் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது என்று தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-28 12:11 GMT

பரந்தூர் விமான நிலையத்திற்காக எட்டு வழி சாலை திட்ட தற்போது மக்களுக்கு பயனுள்ள திட்டம் என்று தி.மு.க உணர்ந்துள்ளது. ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் இந்த எட்டு வழிச்சாலை விவகாரத்தில் மக்களிடம் அவிழ்த்து விட்ட பொய்களையும், குற்றச்சாட்டுகளையும் தற்போது தி.மு.க மறைந்து, இந்த திட்டத்திற்கு ஆளும் கட்சியாக மாறிய பிறகு மிகுந்த ஆதரவை கொடுத்து வருகிறது. எனவே முதலமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், "தன்வினை தன்னைச் சுடும்" என்று உண்மையை தற்போது முதல்வர் அறிந்திருப்பார் இன்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு க அரசு பரந்தூர் மக்களுக்கு தற்போது தரும் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார்கள்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது. பரந்தூர் மக்களுக்கு தேவையான இழப்பீடு தொகை, மாற்றக்கூடிய இழப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும். அனைத்தையும் வழங்கிவிட்டு இடத்தை கேட்கலாம். தி.மு.க ஆட்சியின் போது 2006ம் ஆண்டு தந்த வாக்குறுதியான இரண்டு ஏக்கர் நிலம் இலவசம் என்ற வாக்குறுதியை பரந்தூர் மக்களுக்காவது தற்போது தி.மு.க நிறைவேற்று தரவேண்டும். இனியும் அரசியல் லாபத்திற்காக மக்களை திசை திருப்பாமல், தமிழ்நாட்டில் உண்மையான வளர்ச்சிக்காக தி.மு.க பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


திருவாரூரில் ONGCயின் எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி தற்போது வரை போராடி வருகிறது என்பதை முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன் என்று பா.ஜ.க கட்சி சார்பில் அண்ணாமலை அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Input & Image courtesy: News 7

Tags:    

Similar News