புதிய வீட்டுக்கு மோடியின் பெயர் எதற்காக? பா.ஜ.க. தொண்டரின் அசத்தல் பதில்!
கர்நாடகா மாநிலம், தாவணகெரே மாவட்டம், சென்னகிரி டவுன் ககதூர் சாலை பகுதியை சேர்ந்தவர் ஹாலேஸ். இவர் பா.ஜ.க.வின் மிகத் தீவிரமான தொண்டர் ஆவார். அது மட்டுமின்றி பிரதமர் மோடியின் மீது ஈர்ப்பு கொண்டவரும் ஆவார். இதற்கிடையில் ஹாலேஸின் மகள் திருமணம் முடிந்து ஆஸ்திரேலியாவில் தனது கணவருடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில், தனது மகளுக்காக ஹாலேஸ் புதிய மாடி வீட்டை கட்டினார். அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு தற்போது திறப்பு விழா நடைபெற உள்ளது. வருகின்ற மே 3ம் தேதி அதற்கான விழாவை வைத்துள்ளார். இதனிடையே புதிய வீட்டுக்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்டி அசத்தியுள்ளார். அதன்படி புதிய வீட்டிற்கு நரேந்திர மோடி நிலையம் என்று பெயர் வைத்துள்ளார். அது மட்டுமின்றி பிரதமரின் புகைப்படத்தையும் வைத்துள்ளார்.
இந்த செயல் தனக்கு பெருமை அளிப்பதாக ஹாலேஸ் கூறினார். ஏன் புதிய வீட்டிற்கு பிரதமரின் பெயர் வைத்தேன் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தான் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். எனவே புதிய வீட்டிற்கு அவரது பெயரை வைப்பதற்கு தனக்கு மிகப்பெரிய பெருமையாக உள்ளது. இவ்வாறு ஹாலேஸ் கூறினார்.
Source, Image Courtesy: Daily Thanthi