"புகழ்பாடல் வேண்டாம் ! உங்களைப்போல் நானும் ஒருவனே" - அன்புடன் கேட்டுக்கொண்ட அண்ணாமலை !
Breaking News.
"புகழ் பாடுவதை நிறுத்துங்கள் நாம் அனைவரும் ஒன்றே!" என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் குறைந்த வயதில் ஒரு கட்சியின் தலைபை பொறுப்பை வரலாற்றில் முதன்முறையாக ஏற்றவர் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்த ஒரு காரணத்தினாலேயே இளைஞர்களின் ஆதரவு அண்ணாமலைக்கு மிக அதிகமாக உள்ளது, மேலும் இவர் தனது ஐ.பி.எஸ் பணியை துறந்து அரசியலில் மாற்றம் வேண்டி இறங்கிய காரணமும் இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு புகழை கூட்டியுள்ளது. சில நாட்கள் முன்பு தலைமை பொறுப்பை ஏற்றது முதல் இவரின் அயராத உழைப்பு தமிழகத்தில் பல இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது மட்டுமின்றி இவர்தான் நம் எதிர்கால அரசியலுக்கு சரியான ஆள் என்ற எண்ணமும் தமிழகத்தில் பெரும்பான்மை இளைஞர்களின் மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதனால் அண்ணாமலையை பின்பற்றுபவர்களும், அவரை ஆதர்சமாக ஏற்று சமூக வலைதளத்தில் களமாடுபவர்களும் தமிழகத்தில் அதிகம்.
இந்நிலையில் அண்ணாமலை அவர்கள் அரசியலுக்கு வருகை புரிந்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து சில சமூக வலைதள கணக்குகளில் இருந்து அவரை நடுநிலை நாயகனாக வைத்து புகைப்படங்கள் பகிர்ந்து வந்தன. இந்த புகைப்படத்தை பகிர்ந்து இன்று மாலை தனது ட்விட்டர் பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுளதாவது, "இது போன்ற புகைப்படங்களை பரப்புவதை நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்
நாம் வித்தியாசமான கட்சி மட்டுமல்லாமல் நாம் அனைவரும் ஒரு உன்னத சித்தாந்தத்தை எடுத்து பின்பற்றி வருகிறோம். மற்றும் நமது மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திரமோடி அவர்களின் பார்வை எதிர்காலத்தை முன்னோக்கி உள்ளது.
இங்கு பாராட்டுகள் போன்ற கதாநாயகத்துவத்திற்கு இடமில்லை. லட்சக்கணக்கான தொண்டர்களாகிய உங்களைப் போல நானும் கட்சி வளர்ச்சியில் ஒரு சிறிய பங்கை வகிக்கிறேன்" என அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த தன்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.