தி.மு.க'வுக்கு 6 மாதம் டைம் குடுத்த கேப்டன் மகன் !

நேற்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தி'ன் 69'வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

Update: 2021-08-25 15:45 GMT

தி.மு.க அரசிற்கு 6 மாதம் கால அவகாசம் தரப்போவதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

நேற்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தி'ன் 69'வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, யாரும் தன்னை நேரில் வாழ்த்த வீட்டிற்கு வர வேண்டாம் என்றும், தே.மு.தி.க'வினர் அவரவர் ஊர்களில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை அவர் கட்சி தொண்டர்கள் பின்பற்றினர்.

இன்று விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கொரோனா காலத்தில் தி.மு.க அரசின் செயல்பாடு நன்றாக இருந்தது. 6 மாத அவகாசத்திற்கு பிறகு புதிய அரசு குறித்து கருத்து தெரிவிப்போம், விஜயகாந்த் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார். விஜயகாந்த் நீடுழி வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்" என தெரிவித்தார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News