கஞ்சா விற்க சொல்லி தொல்லை குடுத்த தி.மு.க பிரமுகரை நடுரோட்டில் போட்டுதள்ளிய 4 பேர் !
Breaking News.;
கஞ்சா விற்க சொல்லி தொல்லை கொடுத்து வந்த தி.மு.க பிரமுகர் சம்பத்குமார் என்பவரை அண்ணாநகர் அருகே பைக்கில் செல்லும்போது ஓட ஓட விரட்டி கொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க'வில் 102 வது வட்ட அவைத்தலைவராக உள்ளார் சம்பத்குமார், இவர் டிபிசத்திரம் 16வது குறுக்கு தெருவை சேர்ந்தவர். நேற்றிரவு இரவு சம்பத்குமார் அண்ணாநகருக்கு வேலை நிமிர்த்தமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அண்ணாநகர் போகன் வில்லா பூங்கா அருகே வரும் போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சம்பத்தை வழிமறித்து கத்தியால் சரமாரி வெட்டினர், தப்பியோடிய அவரே விடாது வெட்டி கொன்றனர்.
இதனை கண்ட பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் சம்பத் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்த விசாரணையில் அண்ணா நகரைச் சேர்ந்த, டெக்கா (எ) ஹரிக்குமார், ஜங்குபார் (எ) ஸ்ரீதர், மோகன் வேல் (எ) பிளாக் பெரி, நவின்குமார் ஆகிய 4 பேரை போலீசாரை கைது செய்துள்ளனர்.
மேலும் குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சம்பத் குமார் என்பவர் கடந்த 7 மாதத்திற்கு முன்பு டொக்கா என்கிற ஹரிகுமார் என்பவரின் தந்தையையும், அண்ணன் சரண்குமார் என்பவரையும் டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் பொய்வழக்கு கொடுத்து சிறைக்கு அனுப்பியதாகவும், மேலும் சம்பத்குமாரின் மகன் கோபிநாத் என்பவரும் எதிரிகளை தண்ணீர் கேன் போடவும், கஞ்சா விற்பனை செய்து தருமாறும், இல்லை என்றால் போலீசில் பொய் கேஸ் கொடுப்பேன் என்று மிரட்டி வந்ததாகவும் தெரிவித்தனர். இதனால் தொல்லை தாங்க முடியாமல் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.