டாஸ்மாக் உண்டு! ஆனால் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை - தி.மு.க அரசின் பலே அறிவிப்பு !

Breaking News.

Update: 2021-08-31 02:30 GMT

பொது இடங்களில் டாஸ்மாக் மதுபான கடையை திறந்து வைத்துவிட்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதித்துள்ளது தி.மு.க அரசு.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாகச் சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக தி.மு.க அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு செயல்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ இரண்டாம் அலை ஊரடங்கில் டாஸ்மாக் மதுபான கடையை மூடாமல் திறந்து வியாபாரம் பார்த்து வரும் தி.மு.க அரசு விநாயகர் சிலைகளை வைக்க தடை விதித்திருப்பது இந்து சமுதாய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது குடிக்க வரும் மதுபான பிரியர்கள் கொரோனோ வழிமுறைகளை பின்பற்றுவர் ஆனால் பக்தியுடன் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுபவர்கள் கொரோனோ விதிமுறைகளை பின்பற்ற மாட்டார்கள் என்ற தி.மு.க அரசின் புரிதல் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என பலர் கருதுகின்றனர்.

ஊரடங்கு இருந்த போதிலும் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா அந்த சர்ச் பாதிரியார்களால் கொடி ஏற்றி சப்பரம் இழுத்து கொண்டாடப்படுகிறது. ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு தி.மு.க அரசு அனுமதி மறுக்கிறது.

Tags:    

Similar News