சி.ஏ.ஏ. போராட்டம்.. கொரோனா வழக்குகள் ரத்து.. முதலமைச்சர் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு.!
சி.ஏ.ஏ. போராட்டம்.. கொரோனா வழக்குகள் ரத்து.. முதலமைச்சர் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு.!
சிஏஏ போராட்டம் மற்றும் கொரோனா நேரத்தில் நடமாடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்து உத்தரவிட்ட சம்பவம் வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் உரிமைகள் பறிபோய் விடுமோ என்ற அச்ச உணர்வில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதே போன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளையும் முதலமைச்சர் ரத்து செய்துள்ளார். மேலும், கொரோனா நேரத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவருக்கும் மனநிம்மதியை தரும் என்று நம்புகிறேன். இவை அனைத்தையும் ஒரே நாளில் ரத்து செய்துள்ளதால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.