பட்டியலின அதிகாரிக்கு இருக்கை வழங்காத நீங்க சமூக நீதி பேசலாமா? - ஸ்டாலினிடம் கேட்கும் அண்ணாமலை
அரசு விழாவில் வட்டாசிரியர் கண்ணன் அவர்களுக்கு இருக்கை வழங்காதது தி.மு.க அரசின் சாதிய வன்மத்தின் உச்சம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுளார்.
அரசு விழாவில் வட்டாசிரியர் கண்ணன் அவர்களுக்கு இருக்கை வழங்காதது தி.மு.க அரசின் சாதிய வன்மத்தின் உச்சம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுளார்.
நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா உற்சாகமாக கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூரில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட அரசு துரையைத் தேர்ந்த 233 பேர் பதக்கம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் இக்குவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணன் அவர்களுக்கு இருக்கை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'திருவள்ளூர் மாவட்டம் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணன் அவர்களுக்கு இருக்கை வழங்காதது இந்த தி.மு.க அரசின் சாதிய வன்மத்தின் உச்சம் அவர் பட்டியலினத்தை சார்ந்தவர் என்பதாக தான் இருக்கை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அந்த விழாவில் துணை வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஏன் அங்கு வந்திருந்த தி.மு.க'வினருக்கு கூட இருக்கை வழங்கப்பட்டது. ஆனால் அரசு பிரதிநிதித்துவ ஒருவருக்கே இருக்கை இல்லை! சமூக நீதி, சமத்துவம் என போகும் இடம் எல்லாம் தம்பட்டம் அடிக்கும் தி.மு.க'வின் முகத்திரைக்கு பின்னால் இருக்கும் சாதிய வேறுபாட்டை இந்த நிகழ்வு வெட்ட வெளிச்சமாகியுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.