'குற்றவாளியை கொண்டாடுவதா' - பொசுக்கென்று கோபப்பட்ட எம்.பி.ஜோதிமணி
ஏழு பேர் விடுதலை குறித்து குற்றவாளிகளை கொண்டாட விடக்கூடாது என கரூர் எம்.பி.ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.
ஏழு பேர் விடுதலை குறித்து குற்றவாளிகளை கொண்டாட விடக்கூடாது என கரூர் எம்.பி.ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உட்பட ஆறு பேர் தற்பொழுது விடுதலையானதற்கு பல்வேறு கருத்துக்களை அனைவரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் எம்.பி.ஜோதிமணி இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது, 'காந்தியை கொன்ற கோட்சேவை கொண்டாடுகின்ற ஆர்.எஸ்.எஸ், பாஜகவிற்கும் இன்று ராஜீவ்காந்தி கொலையாளியை கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு?' என கேள்வி எழுப்பி உள்ளார். கருணை அடிப்படையில் குற்றவாளிகள் மன்னிக்கப்படலாம் ஆனால் குற்றவாளிகளை கொண்டாடுவது அநாகரிகமாக அது மட்டும் அல்லாமல் ஆபத்தானதும் கூட' என கருத்து தெரிவித்துள்ளார்.