திருப்பதியில் பரபரப்பு: விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து சந்திரபாபு நாயுடு போராட்டம்.!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்தில் திடீரென்று தர்ணா போராட்டம் நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்தில் திடீரென்று தர்ணா போராட்டம் நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறினார்.
மேலும், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஆளும் கட்சியினர் அழுத்தம் கொடுத்து அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுத்துவிட்டனர்.
இந்நிலையில், ஆளும் கட்சியின் அராஜகத்தை கண்டித்து கண்டித்து திருப்பதியில் போராட்டம் நடத்துவதற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு விமானம் மூலம் வருகை தந்தார்.
அப்போது திருப்பதி விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு சந்திரபாபு நாயுடுவுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றார். மேலும் சந்திரபாபு வந்த அதே விமானத்தில் திருப்பி அனுப்ப அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
இதனால் சந்திரபாபு நாயுடுவிடம் போலீசார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.