'அறநிலையத்துறை புகுந்தா அது ஆமை புகுந்த மாதிரி' - ஹெச்.ராஜா காட்டம்
'கோவிலுக்குள் அறநிலையத்துறை நுழைந்தால் அது ஆமை புகுந்த வீடு' என பா.ஜ.க'வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
'கோவிலுக்குள் அறநிலையத்துறை நுழைந்தால் அது ஆமை புகுந்த வீடு' என பா.ஜ.க'வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது இந்து கடவுள் தில்லை நடராஜனை இழிவாக பேசிய யூடூப்பர் மைனர் விஜயனை தமிழக காவல்துறை கைது செய்யவில்லை? ஆனால் கனல் கண்ணனனை மட்டும் ஏன் கைது செய்கிறார்கள்? இது காவல்துறையா அல்லது ஸ்டாலின் ஏவல்துறையா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், 'கோவிலுக்குள் அறநிலையத்துறை புகுந்தால் அது ஆமை புகுந்த வீடு இதை கையில் எடுப்பதற்கு எங்களுக்கு 10 நிமிடம் ஆகாது இந்து மதத்தை அழிக்கின்ற, கொள்ளையடிக்கின்றன தீய சக்திகள் கும்பலாக செயல்படுகிறது' என தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் எச்.ராஜா.