வன்முறையை தூண்டும் விதமாக பேசக்கூடாது.. அரசியல் கடசிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் மாநாடு மற்றும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது. இதனால் ஒரு அரசியல் கட்சி தலைவர் பற்றி மற்றொரு அரசியல் கட்சியினர் தரம் தாழ்ந்து பேசுவது வாடிக்கையாக உள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வன்முறையை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழக அரசு வெளியிடும் விளம்பரங்களுக்கு தடை விதிக்ககோரி திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி அமர்வு இவ்வாறு கூறியது.