பிரதமருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்: விமர்சனங்களை தாங்க முடியாத தி.மு.க. அரசுக்கு பா.ஜ.க. கண்டனம்!

Update: 2022-01-19 09:50 GMT

பிரதமர் மோடிக்கு ஆதரவாக சென்னை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கருத்து பதிவிட்டமைக்கு அவரை திமுக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் அவருக்கு அனைத்து தரப்பிலும் ஆதரவுகள் பெருகி வருகிறது. அதே போன்று தமிழகத்திலும் ஆதரவுகள் முன்பைவிட தற்போது அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என பலரும் பிரதமர் மோடிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

Full View

இந்நிலையில், சென்னை காவல் உதவி ஆய்வாளர் சேகர் என்பவர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதாவது தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழில ஒருத்தன் 5000 சொன்னான். வந்தா அதை காணொம்.. அதை கேளுங்கடா என்றால் புரியாத இந்தி மொழியில் பேசியதை எதோ புரிஞ்ச மாதிரி சொல்லாத லட்சத்தை கேட்கிறான் பாருங்க கொத்தடிமை.. என்று பதிவிட்டுள்ளார் என கூறப்படுகறிது. இதனால் கருத்தை தாங்கிக்கொள்ள முடியாத திமுக அரசு உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி. சூர்யா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கருத்தை எதிர்கொள்ள முடியாத அரசாக திமுக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News