கருத்துக்கணிப்பில் பின்தங்கிய முதல்வர் ஸ்டாலின் - தி.மு.கவின் அதிகார ஆட்சியில் அதிருப்தியில் மக்கள் | விழிக்கும் தி.மு.க
திராவிட மாடல் என திமுகவினரால் புகழப்பட்டு வரும் மு.க.ஸ்டாலின் ஆட்சி கடந்த முறை கருத்துக்கணிப்பில் பெற்ற
திராவிட மாடல் என திமுகவினரால் புகழப்பட்டு வரும் மு.க.ஸ்டாலின் ஆட்சி கடந்த முறை கருத்துக்கணிப்பில் பெற்ற சதவீதத்தை விட இந்த முறை கருத்துக்கணிப்பில் 14 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நிறைவடைய போகின்றன. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் 505 வாக்குறுதிகளை கொடுத்து, மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து முதன்முறையாக முதலமைச்சரானார் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்போம் எனவும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்ஊதிய முறையை அமல்படுத்துவோம் எனவும், மேலும் தமிழகம் எங்கும் மதுவிலக்கு அமல் படுத்துவோம் என்பது போன்ற பல்வேறு கவர்ச்சி வாக்குறுதிகளை கொடுத்தும் தேர்தல் வியூக நிறுவனர் பிரசாந்த் கிஷோருக்கு கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் அளவில் செலவு செய்து அனைத்து மீடியாக்களிலும் விளம்பரம் செய்தும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பெருமளவில் விளம்பரம் செய்து ஆட்சியைப் பிடித்தனர். திமுகவினர்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்த காரணத்தினாலும், அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிறகு பெரிய தலைமை அமையவில்லை என்ற காரணத்தினாலும், முதன்முறையாக திமுகவின் தலைவர் ஸ்டாலின் முதல்வராகிறார் என்ற காரணத்தினாலும்1 இன்னும் பல அரசியல் சூழ்நிலைகள் காரணமாக மக்கள் அதிமுகவை தவிர்த்து திமுகவிற்கு வாக்களித்தனர் இருப்பினும் திமுக அதிமுக'வை விட பெற்ற வாக்கு சதவீதம் இரண்டு சதவீதம் மட்டுமே.
இருப்பினும் திமுக ஆட்சியை கைப்பற்றியது திமுக ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற போகிறது என்ற மக்கள் மகிழ்ச்சியில் இருந்து நிலையில் திமுக தன் வேலையை காட்ட துவங்கியது! வாக்குறுதிகள் மறக்கடிக்கப்பட்டன, ஆட்சிக்கு வந்த கையோடு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது, சொத்து வரி உயர்த்தப்பட்டது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை! குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் என கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
முதியோர் ஓய்வூதிய தொகையும் மெல்ல மெல்ல நிறுத்தப்பட்டது, அரசு ஊழியர்களுக்கு சலுகை அளிப்போம் என கூறியதும் அறிவிக்காமலே விட்டுவிட்டனர். மருத்துவர்கள், ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர்கள் என அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கி திமுக அரசிடம் எங்கே வாக்குறுதி என கேட்கும் நிலை உருவானது.
இது எல்லாவற்றையும் தாண்டி திமுகவை எதனால் கடந்த காலங்களில் ஆட்சியில் அமர்த்தாமல் மக்கள் ஒதுக்கி வைத்திருந்தார்களோ அதே போன்று மீண்டும் விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடும்ப அரசியல், திரையுலகம் ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, ஊழல் போன்ற திமுகவின் அனைத்து சாராம்சங்களும் மீண்டும் தலையெடுக்க ஆரமித்தது.