மதமாற்ற முயற்சித்த பாதிரியாரை பூட்டி வைத்த ஸ்ரீ ராம் சேனா அமைப்பினர் - சமாளித்து ஓடிய பாதிரியார் !

Update: 2021-11-09 04:45 GMT

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த ஞாயிற்றுகிழமை காலனி மக்களை அழைத்து மதக்கூட்டம் நடத்திய பாதிரியார் சிறைபிடிக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் லெமா செரியன் என்ற கிருஸ்துவ பாதிரியார் காலனி மக்களை அழைத்து ஜெபக்கூட்டத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஸ்துவ மதத்தை பரப்பிக்கொண்டிருத்தார். அப்பொழுது அங்கே வந்த ஸ்ரீ ராம் சேனாவை சேர்ந்த உறுப்பினர்கள் அந்த ஜெபக்கூட்டத்திற்கு பூட்டு போட்டனர்.

பின்னர் காவல்துறை'க்கு அழைப்பு விடுத்த அவர்கள் காவல்துறை அதிகாரிகள் வரும் வரை அங்கிருந்தவர்களை நகரவிடவில்லை. பின்னர் போலீசார் வந்த பிறகு பூட்டை திறந்து அங்கிருந்தவர்களை வெளியே அனுப்பினர்.

இதுகுறித்து ஸ்ரீ ராம் சேனா நிர்வாகி ரவிக்குமார் கோகிட்கர் கூறுகையில், "மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் மத போதகர்கள் குழு பெலகாவி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து, ஏமாந்த இந்துக்களை மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏழை இந்துக்களுக்கு பணம், தையல் இயந்திரங்கள் மற்றும் அரிசி மற்றும் சர்க்கரை நிறைந்த பைகளை கொடுத்து ஏமாற்றி வருவதாகவும், இது போன்ற சட்ட விரோத செயல்களை தடுப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளது" எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பாதிரியார் செரியன் கூறுகையில், "நான் ஆர்வமுள்ள நபர்களின் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு மட்டுமே தலைமை தாங்கினேன், மதமாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை. இத்தகைய கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக நடத்தப்படுகின்றன. இந்த சந்திப்பு குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இங்கு வருமாறு நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை. மக்கள் தாங்களாகவே இங்கு வந்துள்ளனர்" என சமாளிக்கும் விதமாக கூறியுள்ளார். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Source - The Hindu

Tags:    

Similar News