கிறிஸ்தவர்கள் பா.ஜ.க'வை நோக்கி படையெடுக்கின்றனர் - கணித்து கூறும் வானதி சீனிவாசன்

பா.ஜ.க'வை நோக்கி கிறிஸ்தவர்கள் வருகிறார்கள் என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உதாரணத்துடன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-07 14:51 GMT

பா.ஜ.க'வை நோக்கி கிறிஸ்தவர்கள் வருகிறார்கள் என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உதாரணத்துடன் தெரிவித்துள்ளார்.

வட மாநில கிறிஸ்தவர்கள் பா.ஜ.க'வை நோக்கி படையெடுத்து வருகின்றனர். உண்மையான மதச்சார்பற்ற கட்சி பா.ஜ.க தான் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி கூறியதாவது, 'மிசோரம் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலத்தின் தலைநகர் ஜஸ்ட் வானுக்கு சென்று இருந்தேன்.

அப்போது பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இயேசு கிறிஸ்துவினுடைய திருவுருவ படம் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கு பைபிள் வசனங்கள் படிக்கப்பட்டு கூட்டம் தொடங்கியது. இது மிசோரத்தை மட்டுமல்ல வடகிழக்கு மாநிலம் அனைத்து இடங்களிலும் இதேபோன்றுதான் நடந்தது அங்குள்ள கிறிஸ்தவர்கள் பலரும் பா.ஜ.க'வை நோக்கி வருவதையும் பா.ஜ.க கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டுவதையும் பார்க்கும்போது ஆச்சரியம் கொள்ள வைக்கிறது.

ஆனால் பா.ஜ.க'வை நன்கு அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்காது ஏனெனில் இந்தியாவின் மதச்சார்பற்ற கட்சி பா.ஜ.க மட்டும் தான் என தெரிவித்துள்ளார்.


Source - Asinet News

Similar News