ஸ்டாலின் சீல் வைத்த பெட்டியை திறக்கவே முடியாது.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.!

கடலூர் மாவட்டத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை தொடங்கினார். இதன் பின்னர் சிதம்பரத்தில் பிரசாரம் செய்து அங்கேயே இரவில் தங்கினார். இன்று காலை புவனகிரியில் வேட்பாளர் அருண்மொழி தேவனை ஆதரித்து பரப்புரை செய்தார்.

Update: 2021-03-19 12:06 GMT

கடலூர் மாவட்டத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை தொடங்கினார். இதன் பின்னர் சிதம்பரத்தில் பிரசாரம் செய்து அங்கேயே இரவில் தங்கினார். இன்று காலை புவனகிரியில் வேட்பாளர் அருண்மொழி தேவனை ஆதரித்து பரப்புரை செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, நடைபெறுகின்ற தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல், இதில் தர்மம்தான் வெல்லும். தர்மம், நீதி ஆகியவை அதிமுகவிடம் உள்ளது. எனவே அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். ஸ்டாலின் தனது பிரச்சாரங்களில் நாட்டு மக்கள் பற்றி பேசுவது இல்லை, சிந்திப்பதும் இல்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியினர் என்ன செய்வார்கள் என்று எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் என்னை மட்டுமே குறை கூறி வருகிறார். அதிமுக ஆட்சியில் ஜாதி, மதக் கலவரங்கள் இல்லை.

தமிழகம் இன்று வரை அமைதி பூங்காவாக திகழ்கிறது. மேலும் ஸ்டாலின் தான் சென்ற இடங்களில் எல்லாம் அருகிலேய ஒரு பெட்டியை வைத்துக்கொள்கிறார். பெட்டி வாங்கி வாங்கி பழக்கப்பட்டவர் என்பதால் அதனை வைத்திருக்கிறார்.

அதில் ஆட்சி அமைந்தவுடன் மக்களின் பிரச்சனையை 100 நாளில் தீர்த்து விடுவார் என்று சொல்லி வருகிறார். ஆனால் அவர் ஆட்சிக்கு வரவே முடியாது. இதனால் அந்த பெட்டியை திறக்கப்போவதே இல்லை. திமுக கோரப்பசியில் உள்ளனர். எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News