ஹெச்.ராஜா மிகவும் திறமைசாலி.. காரைக்குடி பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.!
தாமரை சின்னத்திற்கு வாக்களித்தீர்கள் என்றால், மாதம் கட்டணமில்லா கேபிள் இணைப்பு, வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள், மாதம் ரூ.1,500 பணம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ம் தேதி வருகிறது. அதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போன்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். நேற்று, காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாக காரைக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது வேனில் நின்றபடி பேசிய அவர், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மிகவும் திறமையானவர். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் தாமரை. எனவே அவரை பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மேலும், திமுக சந்தர்ப்பவாத கூட்டணி மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால்தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும். திமுக என்பது கட்சி இல்லை, அது ஒரு கம்பெனி, பணத்தை கொடுத்து சீட் வாங்கிக்கொள்ளலாம்.
தாமரை சின்னத்திற்கு வாக்களித்தீர்கள் என்றால், மாதம் கட்டணமில்லா கேபிள் இணைப்பு, வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள், மாதம் ரூ.1,500 பணம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.