கோவையில் வாக்காளர்களுக்கு பணம்: கையும் களவுமாக சிக்கிய தி.மு.க.வினர்.!
அதிமுக கூட்டணி கட்சியினர் தடுத்தாலும், அவர்கள் மற்றவர்களுடன் தகாராறில் ஈடுபட்டு வாக்குப்பதிவை நிறுத்தும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்படி தேர்தல் நடக்கும் பல பகுதிகளில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர்.
அது போன்றவர்களை அதிமுக கூட்டணி கட்சியினர் தடுத்தாலும், அவர்கள் மற்றவர்களுடன் தகாராறில் ஈடுபட்டு வாக்குப்பதிவை நிறுத்தும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை வடக்கு தொகுதியில் மணியகாரம்பாளையம் வாக்குச்சாவடியில் பூத் ஸ்லிப்புடன் பணம் கொடுத்த திமுகவினர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.