தி.மு.க.வை வச்சு செய்யும் கோவை பா.ம.க.வினர்: தினமும் வித்தியாசமான முறையில் பிரச்சாரம்.!
மூலபத்திரம் எங்கே, அன்று ரூபாய் 1,76,0000000000 ஊழல், இன்று டீ கடை பிரியாணி கடை அழகு நிலையம், திமுக வாரிசு அரசியல் என்ற வாசகங்கள் அடங்கிய பேனரை வைத்து பாமகவினர் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
திமுக கட்சியே நொந்து போகிற அளவுக்கு தினமும் கோவை மாவட்ட பாமகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தலைவர் பல்வேறு ஊர்களில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரச்சாரத்தில் பேசும்போது, 11 மணிக்கு ஸ்டாலின் பதிவி ஏற்றால் 11.05க்கு திமுகவினர் மணல் அள்ளலாம், எந்த அதிகாரியாவது தடுத்தால் உடனே எனக்கு போன் செய்யுங்கள் அந்த அதிகாரி அந்த ஊரில் இருக்க மாட்டான் என்று பேசினார்.
இவரது பேச்சு தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு அரசியல் கட்சியில் உள்ளவர் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கு நேரடியாகவே ஆதரவு தெரிவிக்கிறாரே என்ற குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது.
அது மட்டுமின்றி திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, அசுரன் படத்தை பார்த்து ஒரு கருத்தை தெரிவித்தார்.
அதாவது பஞ்சமி நிலங்களை நிறைய பேர் ஆக்கிரமித்துள்ளனர் என கூறினார். இதனிடையே திமுகவிற்கு சொந்தமான முரசொலி பத்திரிகையின் அலுவலகம் பஞ்சமி நிலத்தில்தான் உள்ளது என்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 2 ஆண்டுகளாக கூறி வருகிறார். இன்றுவரை ஸ்டாலினால் முரசொலி அலுவலகத்தின் மூல பத்திரத்தை காட்ட முடியவில்லை.
இந்த விவகாரத்தை பாமக, பாஜக கையில எடுத்துக்கொண்டு, திமுகவின் உண்மை முகத்தை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்ட பாமகவினர் வித்தியாசமான முறையில் திமுகவினரை அலற வைத்து வருகின்றனர்.
தினமும் ஒரு பேனர் வைத்து திமுகவின் போலி முகத்தை மக்களுக்கு தெரியபடுத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி பேசிய மணல் திருட்டு பற்றிய வாசகம், அதாவது 11:00 மணிக்கு ஸ்டாலின் பதவியேற்றால், 11.05க்கு திமுகவினர் மணல் திருடலாம் என்ற தலைப்பில் ஒரு நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தனர்.