ஏர் இந்தியா விற்பனைக்கு காங்கிரஸ்தான் காரணம்.. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்.!

ஏர் இந்தியா விற்பனைக்கு காங்கிரஸ்தான் காரணம்.. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்.!

Update: 2021-02-05 17:24 GMT

ஏர் இந்தியா விமானம் விற்பனை செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி அடைவதற்கான பட்ஜெட்தான் தற்போது வெளியாகியுள்ளது. பல்வேறு வகையிலான திட்டங்களுக்கு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.35,000 கோடி மதிப்பில் பட்டியலினத்தவர்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் பற்றி பேசிய அவர், ஏர் இந்தியா விற்பனை செய்வதற்காக காங்கிரஸ் ஆட்சியில்தான் முடிவு செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News