பாலியல் சம்பவத்தை அனுபவிக்கனும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேச்சால் அதிர்ந்த பெண்கள்!

கர்நாடக சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்சனை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இது பற்றி விரிவாக ஆலோசனை செய்வதற்கு நேரம் ஒதுக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

Update: 2021-12-17 12:28 GMT

கர்நாடக சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்சனை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இது பற்றி விரிவாக ஆலோசனை செய்வதற்கு நேரம் ஒதுக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே, அனைத்து உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்கினால் எப்படி மற்ற அலுவல் பணிகளை மேற்கொள்வது என்று பேசினார். மேலும், நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் ஆம் என்றுதான் சொல்வேன். இப்போது நிலைமை என் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இதனை நான் சமாளிக்க முடியாது. எனவே அமைதியாக நடப்பதை பார்க்கலாம் என்று முடிவுசெய்து விட்டேன் எனக் கூறினார்.

அதற்கு அனைவரையும் அதிர்ச்சியளிக்கின்ற வகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ரமேஷ் குமார் ஒரு பதில் அளித்துள்ளார். அதாவாது பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டாலும் அதனை அமைதியாகப் படுத்திருந்து அனுபவிக்க வேண்டும் என்று பேசினார். நீங்களும் அந்த நிலையில்தான் உள்ளீர்கள் என்று சபாநாயகரைப் பார்த்து பேசியது அனைவரையும் அதிர்ச்சியளிக்கும் விதமாகவே இருந்தது. இவரது பேச்சுக்கு கர்நாடகாவில் உள்ள ஒட்டுமொத்த பெண்களும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி காங்கிரஸில் இருக்கின்ற பெண்களும் என்ன செய்வது என்ற நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. பெண்களை ஒப்பிடும் வகையிலும் பாலியில் குற்றச்சம்பவத்திற்கு ஆதரவாக பேசியிருப்பதற்கு கர்நாடாவில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் பெண்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற எம்.எல்.ஏ. எம்.பி.க்கள், ரமேஷ் குமார் கூறிய வார்த்தைக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அதிர்ந்து போன ரமேஷ் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாலியல் சம்பவம் பற்றி நான் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கொடுமையான குற்றச்சம்பவத்தை நான் சிறுமைப்படுத்தும் எண்ணத்தில் பேசவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இனிமேல் சபையில் மிகவும் நாகரீகமான முறையில் நடந்து கொள்வேன் எனவும் உறுதி அளித்துள்ளார். இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களே தர்ம சங்கடத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News