'வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் வாய் திறக்காது' - அமித்ஷா ஆவேசம்

'தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் ஒருபோதும் கண்டனம் தெரிவிக்காது' என அமித்ஷா கூறியுள்ளார்.

Update: 2022-11-28 02:02 GMT

'தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் ஒருபோதும் கண்டனம் தெரிவிக்காது' என அமித்ஷா கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நம் ராணுவ வீரர்களை கொல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அரசியலுக்காக காங்கிரஸ் ஒருபோதும் பாகிஸ்தானில் இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை' எனவும் அவர் தெரிவித்தார்.

மும்பை உயிரிழந்த தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது. 'மும்பை தீவிரவாத தாக்குதல் போன்றவை காங்கிரஸ் ஆட்சியில் நடப்பதற்கு வாய்ப்பு இருந்த போதிலும் இனி இது போன்ற தாக்குதல்கள் நடக்க வாய்ப்பில்லை அதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசே ஆகும்.

கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களை கொல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். சில நேரங்களில் இந்திய ராணுவ வீரர்களின் தலையை துண்டித்துள்ளனர், இருப்பினும் காங்கிரஸ் அது குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை அதற்கு காரணம் அவர்களது வாக்கு வங்கி அரசியல் காங்கிரஸ் வாக்கு வங்கி யார் என உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் நம்புகிறேன்' என்றார்.


Source - Dinamani

Similar News