முஸ்லீம்கள், மாவோயிஸ்டுகளால் ஆபத்து: தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் அண்ணாமலைக்கு Y+ பாதுகாப்பு.!

முஸ்லீம்கள், மாவோயிஸ்டுகளால் ஆபத்து: தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் அண்ணாமலைக்கு Y+ பாதுகாப்பு.!

Update: 2021-02-04 17:10 GMT

தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு Y+ பாதுகாப்பு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பாஜகவுக்கு அக்கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்து வருகிறார். அப்படி செல்லும்போது மாவோயிஸ்டுகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத்துறை மூலமாக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு Y+ பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணாமலை தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் 5 போலீசாரும், வெளியில் செல்லும் போது இரண்டு போலீசாரும் பாதுகாப்பு கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Similar News