பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் விநாயகர் கோயிலில் துணை முதலமைச்சர் வழிபாடு.!

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் விநாயகர் கோயிலில் துணை முதலமைச்சர் வழிபாடு.!

Update: 2021-02-23 10:39 GMT

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றார். அதிகமான கடவுள் நம்பிக்கை கொண்டவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவர் எப்போதும் எந்த ஒரு செயலும் செய்வதற்கு முன்பாக கடவுளிடம் வேண்டிக்கொள்வதை வாடிக்கையாவே வைத்துள்ளார்.

அதே போன்று இன்று தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள இயற்கை ஆலமர விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

இதன் பின்னர் அவர் சட்டசபைக்கு புறப்பட்டு சென்றார். அவர் இன்று 11 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் பல்வேறு வகையான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News