'பாதையில் அபாயமும் இருந்த போதிலும், என் மனதில் எந்தவித பயமும் இல்லை' - தி.மு.க'விலிருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறவருவதென்ன?
தி.மு.க'வில் இருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவால் தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தி.மு.க'வில் இருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவால் தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் கே.எஸ்.ராமகிருஷ்ணன் விமர்சிக்கும் விதமாகவும், கட்சி தலைமைக்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுகவின் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பதிவில் தாகூரின் 'கீதாஞ்சலி'யில் உள்ள வரிகளை மேற்கோள்காட்டி அதில் 'நண்பர்களை நான் பிரியப்போகும் இந்த நேரத்தில் என்னை வாழ்த்தி அனுப்புங்கள்,
வானத்தின் வைகறையின் ஒளி சரிந்து விழுகிறது,
எனது பாதை அழகை பொழிகிறது,
நான் என்னுடன் என்ன கொண்டு போகிறேன் என கேட்காதீர்கள்,
வெறுங்கையுடன் ஆர்வ இதயத்துடன் என் யாத்திரை ஆரம்பமாகிறது,
நான் எனது திருமணமாலையை அணிந்து கொள்கிறேன்,
எனது ஆடை பிராணியின் கஷாய உடையன்று,
பாதையில் எந்தவித அபாயமும் இருந்த போதிலும், என் மனதில் எந்தவித பயமும் இல்லை,
எனது யாத்திரை முடியும்போது அந்தி நட்சத்திரம் எட்டிப்பார்க்கும்,
அரசனின் அரண்மனையில் இருந்து அந்தி மாலையின் சோக கீதங்களின் இனிய கோஷம் பொழிந்து கொண்டிருக்கும்,
நான் இந்த வாழ்க்கையை விரும்பும் காரணத்தினாலேயே மரணத்தை நேசிக்கிறேன்' என பதிவிட்டுள்ளார். இது தி.மு.க தொண்டர்கள் மத்தியில சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.