தருமபுரி மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆசி.!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள, தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட தொகுதியில் போட்டியிட்ட அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், பாலக்கோடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., சம்பத்குமார் ஆகியோர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வெற்றி சான்றிதழை காண்பித்து ஆசி பெற்றனர்.
இதன் பின்னர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, அதிமுக கூட்டணி தருமபுரி மாவட்டத்தில் 5 இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.