நான் நலமாக உள்ளேன் ! போட்டோவுடன் பேஸ்புக்கில் பதிவிட்ட விஜயகாந்த்!

துபாயில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் தான் நலமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் ஈடுபடாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். சில முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்கிறார்.

Update: 2021-09-05 08:35 GMT

மேலும் கடந்த 2018 ஆண் ஆண்டு அமெரிக்க சென்று சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே கடந்த 31ம் தேதி சென்னையிலிருந்து துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்திற்கு செல்லும்போது சக்கர நாற்காலியில் விஜயகாந்த் அமர்ந்தபடி உதவியாளர் தள்ளிச்செல்லும் புகைப்படம் இணையதளங்களில் பரவியது.

இந்நிலையில், அமெரிக்க சென்ற பின்னர் விஜயகாந்த் உடல்நிலை பற்றிய எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகாந்த் சமூக வலைதளங்களில் போட்டோவுடன் இருப்பதை பதிவிட்டுள்ளார். அதில் "நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Vijayakanth Social media

Tags:    

Similar News