தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான 10 இடங்களில் ஐடி ரெய்டு.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. இதனால் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் நினைத்துள்ளனர்.

Update: 2021-03-25 07:25 GMT

திமுக பிரமுகரும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான எ.வ.வேலுவிற்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் கோடி, கோடி பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதே போன்று திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.




 


அவருக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. இதனால் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் நினைத்துள்ளனர்.

இதனால் பல கோடி ரூபாய் பணத்தை திமுக பிரமுகர்கள் பதுக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறைக்கு தகவல் சென்றுள்ளது. இதன் காரணமாகவே சோதனைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதே போன்றுதான் திமுகவினர் பணத்தை கொடுத்து ஓட்டுகளை பெற முயல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News