திமுக, காங்கிரஸ் ஏவிய 2 ஜி ஏவுகணை தமிழகப் பெண்களை இழிவுபடுத்துகிறது.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!

மாணவர்கள் நலன் கருதி, மருத்துவ கல்வி உள்ளிட்டவற்றை தாய்மொழி கல்வியில் கற்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டகால கோரிக்கையை தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்றியுள்ளது.

Update: 2021-03-30 11:28 GMT

திமுக, காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மற்றும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி தவறாக பேசுகிறார்கள். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிடும் என்றார்.




 


மேலும், மாணவர்கள் நலன் கருதி, மருத்துவ கல்வி உள்ளிட்டவற்றை தாய்மொழி கல்வியில் கற்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டகால கோரிக்கையை தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்றியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை வளர்ச்சி மட்டும்தான் எங்கள் நோக்கம். தமிழகத்தின் மொழி, கலாசாரத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆனால் திமுக, காங்கிரஸ் ஏவிய 2 ஜி ஏவுகணை தமிழகப் பெண்களை இழிவுபடுத்துகின்றன. 2ஜி என்பது திமுக ராசா என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News