தி.மு.க'வினர் பிரதமர் மோடி குறித்து தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர் - எச்சரித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

பா.ஜ.க குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-17 10:13 GMT

பா.ஜ.க குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்திரை அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது, 'பா.ஜ.க குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல தமிழகத்திலிருந்து குடும்ப ஆட்சி அகற்ற வேண்டும். மத்திய அரசு தரமான அரிசியை அழித்தாலும் தரமாற்ற அரிசியை தமிழக மக்களுக்கு தி.மு.க அரசு வழங்குகிறது. தி.மு.க'வினர் பிரதமர் மோடி குறித்து தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர்.

மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயன் அடைந்தாலும் இங்குள்ள தி.மு.க அரசு மறைக்க பார்க்கிறது' என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.


Source - Maalai malar

Similar News