"தர்ப்பணம் பண்ண போறியா 500 ரூவா குடு" - சட்டை பையில் ஸ்டாலின் படத்துடன் வடபழனி மண்டபத்தை ஆக்கிரமித்த குண்டர்கள் !
வெள்ளை சட்டையில் ஸ்டாலின் படம் தெரிய குண்டர்கள் வடபழனியில் உள்ள தர்ப்பணம் அளிக்கும் மண்டபத்தை கைப்பற்றி அங்கு காரியம் செய்ய வருவோரிடம் பணத்தை அபகரிக்கும் வழிப்பறி செயல் அரங்கேறி வருகிறது என பிரபல ஆங்கில ஊடகம் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று சம்பிரதாயப்படி மகாளய அமாவாசை என்பதால் இந்து மதத்தை சார்ந்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள். இது சம்பிரதாய நடைமுறையாகும். கடற்கரையில் தர்ப்பணம் தர தி.மு.க அரசு தடைவிதித்துள்ள நிலையில் சென்னையில் முக்கிய பகுதியான வடபழனி முருகன் கோவில் அருகே ஒரு மண்டபம் உள்ளது. இங்கு பித்ருக்கள் தர்ப்பணம் போன்ற காரியங்கள் செய்ய அந்தணர்களும், தர்ப்பணம் தருபவர்களும் வருவர்.
இந்த மண்டபத்தை தற்பொழுது ஆளும்கட்சியான தி.மு.க-வை சேர்ந்த சில நபர்கள் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றியது மட்டுமின்றி அங்கு சில குண்டர்களை நிறுத்தியுள்ளனர், அவர்கள் வெள்ளை சட்டையுடன் பையில் ஸ்டாலின் படம் தெரியும் படி நின்று கொண்டு அங்கு தர்ப்பண காரியம் செய்ய வருபவர்களிடம் அநியாய கட்டணம் வசூல் மிரட்டி செய்கின்றனர்.
உதாரணமாக 30 ரூபாய் கட்டணம் என்று இருந்த தர்ப்பண நிகழ்வை, 300 ரூபாய், 500 ரூபாய் என கட்டணத்தை ஏற்றி அங்கு வருவோரிடம் வழிப்பறி செய்யாத குறையாக பிடுங்குகின்றனர் என அந்த செய்தி குறிப்பு ஆளும் அரசை குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
இந்துக்க்ளை நிம்மதியாக தர்ப்பணமாவது செய்ய விடுவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?
Source: TOI