ஊழலில் கரைப்படிந்த தி.மு.க. தான் பிரதான எதிரி: தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.!

ஊழலில் கரைப்படிந்த தி.மு.க. தான் பிரதான எதிரி: தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.!

Update: 2021-02-17 17:38 GMT

ஊழல்களில் மிகவும் கரைப்படிந்த திமுகதான் எங்களின் பிரதான எதிராக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடி சென்னை வந்து சென்றதை தொடர்ந்து கோவைக்கு வருகின்ற 25ம் தேதி மீண்டும் வருகை தருகிறார். தமிழகத்தில் மத்திய பாஜக தலைவர்கள் அமைச்சர்கள் வருகின்றனர்.

கோவையில் மிக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும், பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் ஓட்டு சதவீதம் பாதிக்காது. விலை உயர்வு என்பது தற்காலிகமானதுதான். விலை குறைய அந்தந்த மாநில அரசுகள் வரிகளை குறைக்க அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், ஊழல்களுக்காக கரைப்படிந்த திமுகதான் எங்களுடைய பிரதான எதிரியாக உள்ளனர். அதனை முன்னிறுத்தி எங்கள் பிரச்சாரம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News