தே.மு.தி.க.விற்கு 10 சதவீதம் வாக்குகள் உள்ளது.. பிரேமலதா விஜயகாந்த்.!

தே.மு.தி.க.விற்கு 10 சதவீதம் வாக்குகள் உள்ளது.. பிரேமலதா விஜயகாந்த்.!

Update: 2021-02-18 16:42 GMT

சென்னையில் தேமுதிக கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: “தேமுதிகவிற்கு 10 சதவீதத்திற்கு அதிகமான வாக்கு வங்கி உள்ளது.கூட்டணியின் போது குறைந்த அளவிலான தொகுதிகளில் போட்டியிடும் போது வாக்கு சதவீதத்தை கணக்கு போடக்கூடாது.

தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களால் மிகவும் சக்தி படைத்தவர்கள். மேலும் அன்று மன்னர் காலத்தில் வாள் ஏந்தி போராடினார்கள்: இன்று வேல் ஏந்தி போராடி வருகிறார்கள். தேமுதிகவின் பலம் என்ன என்று வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

தேமுதிக சார்பாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனு அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News