வாக்காளர்களுக்கு பணம்: கரூரில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி ரெய்டு.!

தற்போது கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2021-04-02 07:18 GMT

கரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், திமுகவினர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீடு மற்றும் திமுக அண்ணாநகர் வேட்பாளர் மகன் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.




 


இந்நிலையில், தற்போது கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் திமுகவினர் பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து ஜெயித்து, மீண்டும் அதனை எடுத்து விடலாம் என்று எண்ணியுள்ளது. அவர்களின் சூழ்ச்சி முறியடிக்கப்படும் என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

Similar News