அவதூறு பேச்சு.. சென்னையில் ராசாவின் உருவபொம்மையை எரித்து மகளிர் ஆர்ப்பாட்டம்.!

சென்னை, மயிலாப்பூரில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2021-03-27 13:20 GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயாரை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்தார். இதற்கு தமிழகத்தில் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக பெண்கள் அனைவரும் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஒரு பெண்ணை இவ்வளவு கீழ்த்தரமான முறையில் பேசினால், ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்கள் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர்.




 


இந்நிலையில், சென்னை, மயிலாப்பூரில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், ராசாவின் உருவபொம்மையை எரித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். உடனடியாக முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

Similar News